ஆடிப்பெருக்கையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஆடிப்பெருக்கையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஆடிப்பெருக்கையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கார், பஸ், வேன், மோட்டார்சைக்கிள்களில் சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்துவிட்டு செல்வார்கள். மேலும் அங்கு விற்கப்படும் சூடான மீன் வறுவல்களை வாங்கி ருசித்து சாப்பிடுவார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுவகைகளை அங்குள்ள பூங்காவில் வைத்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி கொடிவேரி அணையில் நேற்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வரத் தொடங்கினர். பின்னர் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். அதன்பின்னர் மீன் வறுவல்களை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். அங்குள்ள பூங்காக்களில் குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பரிசல்களில் சென்றும் மகிழ்ந்தனர். தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்து சென்றனர். இதையொட்டி கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மொத்தம் 13 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story