மழையால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால்மாயாற்றுக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கக்கூடாது-வனத்துறையினர் எச்சரிக்கை


மழையால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால்மாயாற்றுக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கக்கூடாது-வனத்துறையினர் எச்சரிக்கை
x

முதுமலையில் மாயாற்றின் கரையோரம் சென்ற சுற்றுலா பயணிகளை வன ஊழியர் ஒருவர் எச்சரித்த காட்சி. .

தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழையால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மாயாற்றுக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்: மழையால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மாயாற்றுக்குள் சுற்றுலா பயணிகள் இறங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மாயாறு

கூடலூர், முதுமலை பகுதியில் ஏராளமான ஆறுகள் உள்ளது. இதில் பருவமழை காலங்களில் பாண்டியாற்றில் நீர்வரத்து அதிகரித்து கேரளாவுக்கும், முதுமலை மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணைக்கும் தண்ணீர் செல்கிறது. முதுமலை வழியாக மாயாறு செல்வதால், தெப்பக்காடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம்.

சமீபத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெப்பக்காடு வந்து சென்று உள்ளனர். இதனால் தெப்பக்காடு பிரபலமடைந்து உள்ளதோடு, சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தெப்பக்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் மாயாற்றிற்குள் இறங்கி விடுகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வனத்துறை எச்சரிக்கை

இதனால் தெப்பக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து பல இடங்களில் நின்று கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், மாயாற்றுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கண்டறிந்து தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'தற்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் சில சமயங்களில் இறங்க முயற்சிக்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளை மாயாற்றில் இறங்கக்கூடாது என்று எச்சரித்து வருகிறோம்' என்றனர்.


Next Story