கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குதூகலக் குளியல்...!
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் வந்து கொண்டிருக்கும். இதனால் நாள்தோறும் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வர்.
தற்போது பள்ளிக்கு அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த வழியாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அருவிக்கு சென்று குளித்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story