அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்

அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்
x

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது.

இந்த அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது கார் மற்றும் வேன்களில் அகஸ்தியர் அருவியை நோக்கி படையெடுத்தனர்.

ஆனந்த குளியல்

இதனால் வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அங்கு வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு வானங்களை அனுமதித்தனர்

தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story