பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஈரோடு

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் முன்புறம் 15 ஏக்கர் பரப்பளவில் அணை பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.

நேற்று ஆடிப்பெருக்கு தினம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அதிகமானோர் வந்திருந்தனர். பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு பெற்றுக் கொண்டு பின்னர் குடும்பத்துடன் படகில் பயணித்தபடி பொழுதுபோக்கினர். மேலும் சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் உள்ள கொலம்பஸ், சிறுவர் ரயில், சிறுவர் படகு உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் விளையாடியும், ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து உணவு அருந்தி தின்பண்டங்களை சாப்பிட்டு மகிழ்ந்தனர். பூங்காவின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் மீன் வறுவல் மற்றும் மீன் உணவுகளை சாப்பிட பயணிகள் ஆர்வம் காட்டினர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நேற்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story