விடுமுறை நாளை முன்னிட்டு குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்


விடுமுறை நாளை முன்னிட்டு குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

குற்றால அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 4 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதாலும் அங்கிருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளா மட்டுமின்றி தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். இன்று காலையில் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளித்து மகிழ்ந்தனர்.


Next Story