சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்


சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

கோயம்புத்தூர்

கோவை

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாடிவயல் சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை குற்றால அருவி

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள சாடிவயல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல சாடிவயல் வந்தனர். ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறி வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்

ஆனாலும் அந்த சோதனை சாவடியையொட்டி சின்னாறு செல்கிறது. அதில் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இறங்கி குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அதன் அருகே உள்ள சிறிய தடுப்பணைக்கு சென்றனர். அதில் இளைஞர்கள் நீச்சல் அடித்து குளித்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், குழந்தைகளை ஆழமான பகுதிக்குள் இறங்க விட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆற்றில் குளித்த இளைஞர்கள் வனப் பகுதிக்குள் செல்வதை தடுக்க வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

புத்துணர்ச்சி

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், சாடிவயல் பகுதி யில் லேசான வெயிலுடன் மழை சாரல் என சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆனால் கோவை குற்றால அருவிக்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் சின்னாற்றில் போதுமான அளவுக்கு தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீர் குளிர்ச்சியாக இருந்து புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது என்றனர்.

1 More update

Next Story