புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கம்
தர்மபுரியில் இருந்து பில்பருத்திக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கத்தை செந்தில்குமார் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரியில் இருந்து கடத்தூர்-தாளநத்தம் வழியாக கேத்துரெட்டிப்பட்டி வரை அரசு டவுன் பஸ் சென்று வந்தது. இந்த பஸ்சை பில்பருத்தி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பில்பருத்தியில் நடந்தது. தர்மபுரி அரசு போக்குவரத்து பொது மேலாளர் ஜீவரத்தினம், தலைமை தாங்கினார். பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளா் சரவணன், பொ.மல்லாபுரம் நகர செயலாளர் கவுதமன், மெடிக்கல் சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் செல்லதுரை வரவேற்றார். செந்தில்குமார் எம்.பி. புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.