தட்டார்மடம் - உடன்குடி இடையே டவுன் பஸ் போக்குவரத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


தட்டார்மடம் - உடன்குடி இடையே  டவுன் பஸ் போக்குவரத்து  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x

தட்டார்மடம் - உடன்குடி இடையே டவுன் பஸ் போக்குவரத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

தட்டார்மடம் - உடன்குடி இடையே டவுன் பஸ் போக்குவரத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா

தட்டார்மடம் - உடன்குடி, உடன்குடி - மணப்பாடு, உடன்குடி - பரமன்குறிச்சிக்கும் இடையே டவுன் பஸ் போக்குவரத்து தொடக்க விழா தட்டார்மடத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கோட்ட போக்குவரத்துக்கழக மேலாளர் சரவணன் வரவேற்றார்.

இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலர் ஏ.எஸ்.ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.இந்திராசி, டி.எஸ்.எஸ்.பசுபதி, முதலூர் ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் து.சங்கர், வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், மாநில வர்த்தக பிரிவு பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோட்ட மேலாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.


Next Story