செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் இருந்து நச்சுப்புகை வெளியேற்றம் - கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு


செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் இருந்து நச்சுப்புகை வெளியேற்றம் - கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு
x

சுற்றுப்புறங்கில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பிளீச்சிங் பவுடன், காஸ்டிக் சோடா உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீயணைப்பு ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்நிலையில் இன்று இந்த ரசாயன கிடங்கில் இருந்து வெள்ளை நிற நச்சுப்புகை வெளியேறு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பிறகு ரசாயன கழிவுகளை ஆழமாக மண்ணில் தோண்டி புதைக்காமல், மேலோட்டமாக புதைத்தாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், ரசாயன பொருட்களின் மேல் மழை நீர் பட்டு நச்சுப்புகை வெளியேறி வருகிறது.

இதனால் சுற்றுப்புறங்கில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், ரசாயன பொருட்களின் மீது ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story