கொலுபொம்மைகள் கண்காட்சி


கொலுபொம்மைகள் கண்காட்சி
x

தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலுபொம்மைகள் கண்காட்சி-விற்பனை தொடங்கியது.

தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ள தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசுகையில், தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இக்கண்காட்சி வாயிலாக ரூ.40 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இதில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார். அப்போது பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி, தாசில்தார் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story