தண்டவாள பராமரிப்பு பணி: பல்லவன், பாண்டியன், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: பல்லவன், பாண்டியன், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பல்லவன், பாண்டியன், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, தொழில்நுட்பப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - காரைக்குடிக்கு பிப்.16, 17, 20, 21, 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரெயில் (12605), காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு பிப்.17, 18, 21, 22, 24, 25, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரெயில் (12606) ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை எழும்பூர் - மதுரைக்கு பிப்.17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (22623),சென்னை சென்ட்ரல் - மதுரைக்கு பிப்.22, 24, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (20601), தாம்பரம் - நாகர்கோவிலுக்கு பிப்.27-ம்தேதி இயக்கப்படும் ரெயில் (22657), மறுமார்க்கமாக, நாகர்கோவில் -தாம்பரத்துக்கு பிப்.28-ம் தேதி இயக்கப்படும் ரெயில் (22658) ஆகியவையும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், சென்னை எழும்பூர் - மதுரைக்கு பிப்.15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரெயில் (12637) கூடல் நகர் - மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு பிப்.24, 25 தேதிகளில் இயக்கப்படும் சிலம்பு விரைவு ரெயில் காரைக்குடி - செங்கோட்டை இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது. தேஜஸ் விரைவு ரயில் உட்பட சில ரெயில்களும் பகுதி ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story