தண்டவாளம் பராமரிப்பு பணி: சேலம்- விருத்தாச்சலம் ரெயில் ரத்து
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சேலம்- விருத்தாச்சலம் ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
சேலம்
சூரமங்கலம்:
விருத்தாச்சலம் ரெயில் மார்க்கம் சின்னசேலம்- புக்கிரவாரி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி விருத்தாச்சலம்- சேலம் பாசஞ்சர் ரெயில் (06121), சேலம்- விருத்தாச்சலம் பாசஞ்சர் ரெயில் (06896) ஆகிய ரெயில்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. காரைக்கால் - பெங்களூரு ரெயில் (16530) இயக்கத்தில் நாளை 1½ மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story