மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x

லத்தேரி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

விரிஞ்சிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிச்சென்று சில மர்ம ஆசாமிகள் பாலாற்றில் இருந்து மணல் கடத்துவதாக லத்தேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வட விரிஞ்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் அம்மாயி கொடுத்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெறுகிறது.


Next Story