டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2023 4:45 AM IST (Updated: 26 Aug 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அஸ்வால் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை புறப்பட்டார். சுல்தான்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் அஸ்வால் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வால் இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story