டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி
சிவகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து பெண் பலி பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் பகுதியைச் சேர்ந்த விவசாய பெண் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் தேவியாறு ஆற்றின் அருகில் உள்ள தோட்டத்தில் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் டிராக்டரில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தேவியாறு அருகே சின்னராசு காடு பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிரைலருடன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தேவிபட்டணம் கீழூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி சுந்தரம்மாள் (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மரியபாக்கியம், மரியசெல்வம், ராஜலட்சுமி, கடல் மாதா, கோமதி, தங்கமலை, கிறிஸ்துமேரி, செல்வம், ஜெயமேரி, முத்துமாரி ஆகிய 10 பெண்களும் காயமடைந்தனர். உடனே அவர்களை சிவகிரி, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.