கார் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி


கார் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
x

டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் பலியானார்.

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வௌ்ளகோவில் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் பலியானார். காயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் ராம் நகர் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60). டிராக்டர் டிரைவர். இவர் சம்பவத்தன்று காலை டிராக்டரை ஓட்டிக்கொண்டு காங்கயம் மெயின் ரோட்டுக்கு வந்தார்.

அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த காரை நீலகிரியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் ஓட்டினார். கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சாலையில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டிராக்டர் டிரைவர் ரங்கசாமி டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி இறந்தார். ேமலும் இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த ஞானசேகர் மற்றும் காரில் உடன் வந்த விஜயலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story