மணலுடன் டிராக்டர் பறிமுதல்


மணலுடன் டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணலுடன் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு தலைமையிலான போலீசார் இளமனூர் அம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் டிராக்டரில் அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் ஒரு யூனிட் மணலுடன் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமலான் நகர் பகுதியை சேர்ந்த பகுருதீன், காஜா முஹைதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story