புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி    தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

இணை செயலாளர் ஸ்டாலின், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் ஆளவந்தார், இணை செயலாளர்கள் சுப்புராயன், பாபு, துணை தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.


Next Story