தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சி கமிஷனரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், சுமைப்பணி தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் செட்டுகளை அகற்றும் நடவடிக்கைகளை கைவிட கோரியும், நகரில் பரவி கிடக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகாசி இரட்டைபாலம் அருகில் விருதுநகர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் தேவா, துணை செயலாளர் முருகன், நகர செயலாளர் முருகாண்டி, மூக்கையா, சுந்தர்ராஜ், கருத்தப்பாண்டி, முனியாண்டி, ஆறுமுகம், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story