தொழிற்சங்கத்தினர் மறியல்; 80 பேர் கைது


தொழிற்சங்கத்தினர் மறியல்; 80 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 12:06 AM IST (Updated: 25 Jan 2023 12:07 AM IST)
t-max-icont-min-icon

மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். 240 நாட்கள் பணி புரிந்தால் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எந்த தொழிலாளியாக இருந்தாலும் ரூ.21 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் தனசிங், பொறுப்பாளர்கள் மாணிக்கம், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தவர்களை, பஸ் நிலையம் நுழைவு வாயில் முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 80 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story