போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது


போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது
x

திசையன்விளை அருகே போக்சோ சட்டத்தில் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24). ஐஸ் வியாபாரி. இவர் 4 வயது சிறுமிக்கு ஐஸ் கொடுத்து, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story