வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வியாபாரி

திருவட்டார் அருகே உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளையை சேர்ந்தவர் டேவிட் செல்வராஜ் (வயது 65). இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உண்டு. மூன்று மகள்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட் டது. இவர்களுடன் டேவிட் செல்வராஜ் வசித்து வருகிறார். இவரின் இளைய மகன் ஜோயல் ஜெபசிங் (36). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும் கொற்றியோடு பகுதியை சேர்ந்த அபிஷா (25) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக 1½ ஆண்டுகளுக்கு முன் மனைவி அபிஷா பிரிந்து சென்று தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ஜோயல் ஜெபசிங் மனவருத்தத்தில் அடிக்கடி மது குடித்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜோயல் ஜெபசிங் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். உடனே அவரை, அவரது அண்ணன் ஜெஸ்டின்ராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலையில் ஜோயல் ஜெபசிங் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து டேவிட் செல்வராஜ் திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story