தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை
செய்யாறு அருகே தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு
வெம்பாக்கம் தாலுகா அசனமாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 49). இவர் அப்பகுதியில் எலக்ட்ரிகல் கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று காலை மகன் கோகுலவாசனை கடையை திறக்கக்கூறி வீட்டில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டதாக தெரிகிறது.
சிறிது நேரம் கழித்து அவரது மனைவி சுகுமாருக்கு போன் செய்து உள்ளார்.
அப்போது போன் 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டு மாடியில் உள்ள அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு பெரூங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.