வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

புதுக்கோட்டை

தூத்துக்குடி அருகே குப்பனாபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 49). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியிருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வெளியூர்களுக்கு சென்று கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். இதில் வரும் பணத்தின் பெரும் பகுதியை மது குடித்து செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரபாண்டியின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த வீரபாண்டி நேற்று விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள பிடாரம்பட்டியில் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய வீரபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவரது சட்டை பையில் இருந்த செல்போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story