வியாபாரி தீக்குளித்து தற்கொலை


வியாபாரி தீக்குளித்து தற்கொலை
x

ரத்தினபுரியில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கணபதி

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 44). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாலமுருகன் தனது சகோதரனுடன் சேர்ந்து பழைய வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை சேமித்து வைக்காமல், தேவையில்லாமல் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாலமுருகன், சம்பவத்தன்று பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தொடர்ந்து வலி தாங்க முடியாமல் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story