மோட்டார்சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பாஞ்சரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 43), நெல் வியாபாரி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு துளசிராமன் (13), பிரசாந்த (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
துளசிராமனுக்கு 30-ந் தேதி பிறந்தநாள் என்பதால் வந்தவாசிக்கு சென்று புத்தாடை எடுத்து கொண்டு ராஜா, ரேவதி இருவரும் நேற்று இரவு வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
பொன்னூர் கூட்ரோடு அருகே சென்றபோது, வந்தவாசி நோக்கி சென்ற ஜப்திகாரணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜா, மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.
மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பொன்னூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.