மரம் விழுந்து வியாபாரி பலி


மரம் விழுந்து வியாபாரி பலி
x

திருவலம் அருகே மரம் விழுந்து வியாபாரி பலியானார்.

வேலூர்

காட்பாடி தாலுகா திருவலத்தை அடுத்த ஏரந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாரி தாங்கல் ஏரியில் உள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்காக பெரிய ராமநாதபுரத்தை சேர்ந்த மர வியாபாரி தரணிவாசன் (வயது50), சின்ன ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கத்தாரித்தாங்கல் ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு 30 அடி உயரம் உள்ள கருவேல மரத்தை, மரம் அறுக்கும் எந்திரம் மூலம் அறுக்கும்போது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மரம் விழுந்துள்ளது.

இதில் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட இருவரில் மர வியாபாரி தரணிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தியமூர்த்தி பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த சத்தியமூர்த்தியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story