வில்லுக்குறி அருகே கார் மோதி வியாபாரி பலி


வில்லுக்குறி அருகே கார் மோதி வியாபாரி பலி
x

வில்லுக்குறி அருகே கார் மோதி வியாபாரி பலியானார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

ராஜஸ்தான் மாநிலத்தை ேசர்ந்தவர் ஜெனாராம் (வயது41). இவருடைய அண்ணன் ஜோராராம் மதுரை மாவட்டம் முனிச்சாலை லட்சுமிபுரம் பகுதியில் தங்கியிருந்து சில்வர் பாத்திரங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதையடுத்து ஜெனாராம் அண்ணனுடன் சேர்ந்து வெளி மாவட்டங்களில் விற்கப்படும் பாத்திரங்களுக்கான பணத்தை வசூல் செய்யும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெனாராம் வியாபாரம் தொடர்பாக நகர்கோவிலில் இருந்து தக்கலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வில்லுக்குறியை கடந்து காரவிளையில் வந்த போது பின்னால் வேகமாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜெனாராமை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு ெசன்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி வியாபாரி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

---


Next Story