மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்
சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமம், புதுகாலனி, தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). மாட்டு வியாபாரியான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் வியாபாரம் சம்பந்தமாக எலியத்தூர் கிராமத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் கச்சிராயபாளையம்-கனியாமூர் சாலையில் சொந்த ஊர் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். தொட்டியம் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தின் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வராஜ் மனைவி வசந்தா(50) கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
Related Tags :
Next Story