வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்


வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
x

நெல்லையில் வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாகக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், துணை செயலாளர்கள் செய்யதுஅலி, ஆதிமூலம், பொருளாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். கீழ ரதவீதி வாகையடி முனையில் திறந்து கிடக்கும் சாக்கடை மூடிகளை மூட வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் இருக்க நகர பகுதியில் உள்ள இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்து ஓடைகளை சரிசெய்ய வேண்டும். நெல்லை டவுன் போஸ் மார்க்கெட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நெல்லை- தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜவகர் நன்றி கூறினார்.


Next Story