வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
பரமன்குறிச்சி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
உடன்குடி:
பரமன்குறிச்சி சுற்று வட்டார வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் தனசிங்செல்வராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர்சங்கபேரமைப்பு மாநில இணைச்செயலாளர் ஜெபஸ் திலகராஜ் முன்னிலை வகித்தார். சங்க துணைச்செயலாளர் மகராஜா வரவேற்றார். சங்க செயலாளர் சின்னத்துரை ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்டராஜா, பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் வரும் மே 5-ந்தேதி ஈரோட்டில் நடக்கஇருக்கும் வணிகர் மாநாட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டத்தை உள்ளடக்கிய கன்னியாகுமரி மண்டலத்திலிருந்து 30ஆயிரம் வணிகர்கள் கலந்து கொள்வது, இந்தியநாட்டு தயாரிப்புகளை அதிகமாக வாங்கி விற்பனை செய்வது, வியபாரிகளுக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்வு காண்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரமைப்பு தெற்குமாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செய்திதொடர்பாளர் அம்புரோஸ், தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், தெற்குமாவட்ட துணைச்செயலாளர் செல்வின் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.