வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்


வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
x

நெல்லை டவுனில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் மீரான், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.

கூட்டத்தில் நெல்லை டவுன் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைத்து தரும்படி மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் இம்மானுவேல், துணைச்செயலாளர் பகவதிராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் முத்து சிவன் நன்றி கூறினார்.


Next Story