வியாபாரிகள்- கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வியாபாரிகள்- கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி உடன்குடியில் வியாபாரிகள்- கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பஸ்நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், வியாபாரியை தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தியும் வியாபாரிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகு ராஜன் விரைந்து வந்தார். இங்கு ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. பேரூராட்சி திடலில் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் எனக்கூறினார். இதையடுத்து அடுத்து முற்றுகையிட்ட மக்கள் பேரூராட்சி திடலுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். உடன்குடி வட்டார கவுரவ தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் ரமேஷ், சுபாஷ், ராஜாராம், கணேஷ், முருகேசன், பாலசிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைமை ஓருங்கிணைப்பாளர் அருண்குமார், நெல்லை மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் பேசினார்கள். இதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story