வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது


வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது
x

வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.

திருவண்ணாமலை

ஆரணி

வியாபாரிகளிடம் சாதி, மதம் இருக்கக்கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.

புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆரணி தாலுகா அனைத்து வணிகர்கள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆரணியில் நடந்தது.

மாவட்ட தலைவர் எம்.மண்ணுலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ், பொருளாளர் பி.கணேசன், செய்தி தொடர்பாளர் முரளிதரன், கூடுதல் செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க அமைப்பாளர் எஸ்.டி.செல்வம் வரவேற்றார்.

சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ராஜன், செயலாளராக எம்.திருநாவுக்கரசு, பொருளாளராக மணிகண்டன் ஆகியோருக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வாடகை பிரச்சினை

ஆரணியில் நகராட்சி கடைகளில் வாடகை பிரச்சினை உள்ளது, இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு புதிய கமிட்டி அமைத்துள்ளார்

அதில் நமது பிரதிநிதியும் ஒருவர் உள்ளடங்கியுள்ளார். இதனால். இந்த பிரச்சினை வெகுவிரைவில் நல்ல முடிவுக்கு வரும்.

மேலும் ஆரணி நகரின் மையத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வியாபார சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,

சாதி, மதம்

வியாபாரிகள் நன்றாக இருந்தால் அந்த ஊர் நன்றாகவும், பிரச்சினைகள் இல்லாமலும் இருக்கும். வியாபாரிகளிடத்தில் சாதி, மதம் இருக்கக் கூடாது. இன்று ஆன்லைன் விற்பனை அதிகரித்தும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

இவற்றையெல்லாம் வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அவற்றை முறியடிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாநில பொறுப்பாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில இணைச்செயலாளர் பி.செந்தில்மாறன், கடலூர் மண்டல தலைவர் டி.சண்முகம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன்,

சங்க செயலாளர் கே.செங்கீரன், பொருளாளர் சுபானி, மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் அருளாளன், தனபால் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுரேஷ்பாபு உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story