வணிகர்களின் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்- ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் .
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது,
ஒவ்வொரு வருடமும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர்களும், அவர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகர்கள் பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள். உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வர்த்தகம் செய்யும் வணிகர்களின் பணி அனைவருக்கும் பயனுள்ளது. மத்திய-மாநில அரசுகள் வணிகர்களின் தொழில், வியாபாரம் பெருக, வணிகத்தினால் பொது மக்களும் பயன்பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story