காங்கயத்தில் பாரம்பரிய மாட்டுச்சந்தை
காங்கயத்தில் பாரம்பரிய மாட்டுச்சந்தை
காங்கயம்,
காங்கயத்தில் பாரம்பரிய மாட்டுச் சந்தையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
மாட்டுச்சந்தை
காங்கயத்தில் பாரம்பரியமிக்க மாட்டுச்சந்தை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மாட்டு சந்தையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த ஒரு திட்டமானாலும் மக்களுக்கு உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் காங்கயம் நகராட்சியில் பாரம்பரிய மாட்டுச்சந்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 மாத காலமாக அதற்குரிய நடவடிக்கை எடுத்தது. பாரம்பரியமிக்க கால்நடைகள் என்றால் அது காங்கேயம் கால்நடைகளுக்கு உலகளாவிய மரியாதை இருக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் நீண்ட இடைவெளிக்குப் பின் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மக்களின் சார்பாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வு
பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகில் காளை மாடு சிலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.