பாரம்பரிய உணவு திருவிழா
மூத்தாக்குறிச்சி ஊராட்சி பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
தஞ்சாவூர்
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடந்தது. இதில் மூத்தாக்குறிச்சியை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய உணவான சாமை, திணை, வரகு, கருப்பு அரிசி ஆகியவைகளை மூலம் கொழுக்கட்டை, அவல், கேக், லட்டு போன்றவற்றை மண்பானை மற்றும் வாழை இலையில் செய்து கொண்டு வந்திருந்தனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுனர்கள் பிரகாஷ், வீரப்பராஜா ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய உணவு திருவிழாவில் உணவு சமைத்து கொண்டு வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர். முடிவில் தலைமை ஆசிரியை செல்வராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story