பாரம்பரிய உணவு திருவிழா


பாரம்பரிய உணவு திருவிழா
x

பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், பாரம்பரிய உணவுத்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், தின்பண்டங்கள், பப்பாளி அல்வா, பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி கலந்த லட்டு, முருங்கைக்காய் சூப், பழங்கள், காய்கறி வகைகள் மற்றும் கடல்சார் உணவு வகைகள் மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவு வகைகளின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து கலெக்டர் கவிதா ராமு கேட்டறிந்தார். மேலும் உணவு வகைகளை ருசியும் பார்த்தார். பொதுமக்களும் உணவு திருவிழாவை ஆர்வமுடன் பார்வையிட்டனர். விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் தயார் செய்து வைத்திருந்த பாரம்பரிய உணவினை ருசி பார்த்தனர். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story