திண்டுக்கல்லில் மஞ்சள் நீராட்டு விழா; மாட்டுவண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்கள்


திண்டுக்கல்லில் மஞ்சள் நீராட்டு விழா; மாட்டுவண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்கள்
x
தினத்தந்தி 1 May 2023 2:30 AM IST (Updated: 1 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன்கள் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில், பழனி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு தம்பதியின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் தாய்மாமன்கள் 12 மாட்டு வண்டிகளில் சேலை, அரிசி, நகைகள், பழங்கள், பாத்திரங்கள் என ஏராளமான சீர்வரிசை பொருட்களை மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அப்போது தப்பாட்ட கலைஞர்கள் ஆடிப்பாடியபடியும், பட்டாசுகளை வெடித்தபடியும் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். கிராமங்களில் இதுபோன்ற விழா நடந்தால் தாய்மாமன்கள் உறவினர்கள் உதவியுடன் சீர்வரிசை பொருட்களை தூக்கிச்செல்வதை பார்த்திருக்கிறோம். இங்கு மாட்டு வண்டிகள் மூலம் சீர்வரிசை பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். முன்னதாக பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்ததால் மாட்டு வண்டிகளில் இணைக்கப்பட்டிருந்த மாடுகள் மிரண்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story