மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்


மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.

பாரம்பரிய விளையாட்டுகள்

முந்தைய காலங்களில் உடலுக்கும், அறிவுக்கும் வேலை கொடுக்கும் பாரம்பரிய விளையாட்டுகள் இருந்தன. அந்த வகையில் பல்லாங்குழி, திருடன் போலீஸ், கயிறு இழுத்தல், உறியடி, பம்பரம், ெநாங்கு வண்டி உருட்டுதல் போன்ற விளையாட்டுகள் பாரம்பரியமாக பழக்கத்தில் இருந்தன.

அந்த விளையாட்டுகளை குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளை யாடும் போது அவர்களிடம் நட்பு, பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் இயல்பாக தோன்றும்.

ஆனால் தற்போது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்து மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் குறைந்து விட்டது.

தொழில்நுட்ப சாதனங்கள்

அந்த அளவுக்கு தொலைக்காட்சி, செல்போன், கணினி என்று தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அதிகரித்து விட்டன. இதனால் குழந்தைகள் வீட்டுக்குள் தனியாக அமர்ந்து அந்த சாதனங்களின் உதவியோடு தனியாக விளையாடும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்வது இல்லை.

இதன் காரணமாக எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. அது போன்ற நிலையை மாற்றவும், குழந்தைகளிடம் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் கோவை மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரம்பரிய விளை யாட்டு ேபாட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருவிழா கோலம்

அதன்படி பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒவ் வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை 'திறன்பட கேள்' என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்பட் டது.

அதை திருவிழா போல் கொண்டாடும் வகையில் பள்ளி சுவரில் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகளை விளக்கும் வகையில் ஓவியங்களை மாணவர்கள் வரைந்தனர்.

பள்ளி வளாகத்தில் மா இலை, கரும்பு, பனை ஓலையால் தோரணம் கட்டப்பட்டது. பள்ளியின் நுழைவு வாசல் பகுதியில் கல்விக்கடவுள் சரஸ்வதியின் சிலை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவிகள் பலவித வண்ண கோலமிட்டனர்.

உறியடித்தல்

தமிழர் கலாசாரப்படி புதுப்பானையில் பொங்கல் வைக்கப்பட ்டது. பள்ளி வளாகத்தில் மாட்டு வண்டி நிறுத்தப்பட்டது. விளை யாட்டு போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து டயர் உருட்டுதல், கண் ணாமூச்சி, நொண்டி, கம்பத்தாட்டம், கயிறாட்டம், பச்சக்குதிரை, பல்லாங்குழி, கபடி, கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன.

இதில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். மேலும், பறை, கரகம், தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு ஆகிய பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

அப்போது நஞ்சில்லா உணவு, சுவர் இல்லாத கல்வி, மருந்தில்லா மருத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

மாணவர்கள் ஆர்வம்

போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்திய தமிழ் ஆசிரியர் பாலமுருகன் கூறுகையில், தமிழ் பாடப்புத்தகத்தில் நாட்டுப்புற பாடல்கள், கலைகள், உணவே மருந்து ஆகியவை இடம் பெற்று உள்ளன.

அதை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு மாணவர்களுக்கு பராம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து ஓடி விளையாடுவதால் நல்ல தோழமையுடன் செயல்படுகிறார்கள் என்றார்.

இது குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், பள்ளியில் நடந்த பாரம்பரிய விளையாட்டு போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சிகரமாக இருந்தது.

இதன் மூலம் எங்களின் தாத்தா, பாட்டி, பெற்றோர் விளையாடிய விளையாட்டுகளை அறிந்து கொண்டோம். இது போல் மற்ற பள்ளிகளிலும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

அந்த விளையாட்டுகள் அழியாமல் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வோம் என்றனர்.


Next Story