தாளவாடி அருகே பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி
கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு லாரிகள், வேன்கள் ஆகியவை மாடுகளை ஏற்றிக்கொண்டு, தடை செய்யப்பட்ட தலமலையில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையில் கடந்த சில மாதங்களாக சென்று வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட மகாராஜன்புரம் சோதனைச்சாவடி மற்றும் தலமலை சோதனைச்சாவடியை கடந்து இந்த மாடுகளை ஏற்றி செல்லும் லாரிகள் தொடர்ந்து சென்று வருகின்றன. அதேபோல் நேற்று அதிகாலை கர்நாடகாவில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு 2 கன்டெய்னர் லாரிகள் தடை செய்யப்பட்டுள்ள வனச்சாலையில் சோதனைச்சாவடிகளை கடந்து சென்றுள்ளது. தாளவாடி நெய்தாளபுரம் அருகே சென்றபோது திடீரென லாரி பழுதாகி ரோட்டில் நின்றது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட வனச்சாலையில் மாடுகளை ஏற்றி செல்லும் நபர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.