காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு
காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கரூர்
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சுமார் 350 அடி நீளமுள்ள காற்றாலை விசிறியின் இறக்கையை நீளமான லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் வழியாக தவிட்டுப்பாளையம் வந்தது. மிகவும் நீளமான இறக்கையை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்ததால் இறக்கையை ஏற்றி செல்லும் லாரிக்கு பின்னால் வரும் அனைத்து வாகனங்கள் லாரியை முந்திச் செல்ல முடியாமல் லாரியின் பின்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து வந்தன. காவிரி ஆற்றுப் பாலத்தின் வழியாக செல்லும் போது எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து இறக்கையை ஏற்றி சென்ற லாரிக்கு பின்னால் சென்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story