விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம்


விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

பாலம் கட்டும் பணியால் விழுப்புரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

பாலம் கட்டும் பணி

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை-45 சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பழுதடைந்த பாலத்தை புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியை தொடர்ந்திட நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை மூலம் இரு கட்டங்களாக பணியை மேற்கொள்ள திட்டமிட்டு முதல்கட்ட பணி முடிவடைந்து 2-வது கட்டமாக செய்யப்பட உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அச்சாலையின் இடதுபகுதியில் (தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் உள்ளது) 2-ம் கட்டமாக செய்யப்பட உள்ளது.

போக்குவரத்து மாற்றம்

எனவே திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், மதுரைவீரன் கோவில் முதல் புதிய பஸ் நிலையம் வரை நெடுஞ்சாலையின் வலது வழியில் ஒரு பகுதியில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியில் உள்ள மற்றொரு பகுதியில் (புதிய பஸ் நிலையம் பக்கம்) மெதுவாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பணியை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், இதற்கு உரிய ஒத்துழைப்பினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story