சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!


சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!
x

சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3 (நாளை) 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய தேதிகளில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடபழனி சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐ.பி.எல். போட்டி பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 3,12,21 மற்றும் மே.10, 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையும், ஏப்.20, மே.6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணி முதல் 8 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, பெரியார் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


Next Story