லாரிகளால் போக்குவரத்து நெரிசல்


லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
x

லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி புறக்காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோரங்களில் ஏராளமான லாரிகள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் 108 ஆம்புலன்சுகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story