ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து ெநரிசல்


ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து ெநரிசல்
x

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

விருதுநகர்

ஆலங்குளம்

ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

டவுன் பஸ்கள்

கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருவேங்கிடம் ஆகிய நகரங்களுக்கு மத்தியில் ஆலங்குளம் அமைந்துள்ளது. இந்த நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஆலங்குளம் வழியாக தான் சென்று வருகின்றது.

தினசரி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் டவுன்பஸ்கள் அனைத்தும் ஆலங்குளம் முக்கு ரோடு வந்து தான் திரும்ப நகரங்களுக்கு செல்கின்றன. ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு சிமெண்டு மூடை ஏற்றி வரும் லாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் பஸ்கள், பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் தொழிலாளர் பஸ்கள் ஆகியவை ஆலங்குளம் முக்கு ரோடு வழியாகத்தான் சென்று வருகின்றது.

போக்குவரத்து நெரிசல்

இதனால் ஆலங்குளம் முக்குரோடு பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்தநிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிறது.

ஆதலால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள், மாணவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆலங்குளம் முக்குரோடு பகுதியில் ஆங்காங்ேக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

எனவே போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story