வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்


வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் சன்னதி வீதியில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் பகுதியில் முக்கிய சாலையாக கடைவீதி, சன்னதி வீதி, மேலவீதி, ஆனைகுளசாலை உள்ளிட்ட சாலைகள் இருந்து வருகின்றன. இந்த சாலைகளில் காலை நேரங்களில் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் வாகனங்களில் வருகின்றனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் திருக்கடையூர் சன்னதி வீதி, மேலவீதி, ஆனைகுள சாலை இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி வாகனங்களை நிறுத்தினாள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story