சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
கோடை விடுமுறையையொட்டி வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் நகர் பகுதி சாலையிலும், சுற்றுலா தலங்கள் உள்ள சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வால்பாறை மெயின் ரோட்டில் குமரன் சாலை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகளின் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் தினமும் குமரன் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கூடுதல் போலீசார்
இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும், சமவெளி பகுதியில் இருந்து பொருட்கள் லாரிகளில் வருகிறது. இந்த லாரிகள் மெயின் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொருட்கள் கடைகளில் இறக்கி வைக்கப்படுகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது தவிர முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதி சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் கடும் சிரமத்துக்கு இடையே சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க சமவெளி பகுதியில் உள்ளதை போன்று, சீசன் காலங்களில் மட்டும் வால்பாறையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்ைக விடுத்து உள்ளனர்.