கும்பகோணம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்


கும்பகோணம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
x

கும்பகோணம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

தஞ்சாவூர்

கும்பகோணம்:

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையான எழுது பொருட்கள், புத்தகப்பை, சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நேற்று கும்பகோணம் நகரில் உள்ள கடைகளில் திரண்டனர். இதனால் கும்பகோணம் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழைய மீன் மார்க்கெட், செல்வம் தியேட்டர், நாகேஸ்வரன் வடக்கு வீதி, உச்சி பிள்ளையார் கோவில், யானையடி, மடத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story